A BLOW ON POOR GRAMIN DAK SEVAKS !
குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் !.
ஒவ்வொரு GDS அஞ்சலகமும் தனது வருமானத்திற்குள்
செலவினம் அடங்குவதாக ( RUNNING/ OPERATIONAL COST/
SALARY COMPONENT) இனி இருக்க வேண்டும் .
அதாவது தன்னிறைவுபெற்றதாக இருக்க வேண்டும்
இதனை 2013- 14 ஆம் நிதியாண்டில் பெற்றிட, ஏற்கனவே
இருந்ததை விட மேலும் 25% அதிக வருவாய் பெரும்
வண்ணம் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப் படும் .
இதனை கீழ் மட்ட அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் ஆய்வு
செய்து , ஒவ்வொரு பகுதியிலும் (உதாரணம் :- SB, RD, RPLI,
EPOST ETC) வருமான உயர்வு எவ்வளவு என்பதற்கான அறிக்கையை ,
அடுத்த மாதம் 5 தேதிக்குள் இலாக்காவுக்கும் ,
துறை அமைச்சரின் பார்வைக்கும் அனுப்பிட வேண்டும் .
இதற்கான உத்திரவை (தேதி கூட போட நேரமில்லாமல்)
RURAL BUSINESS DIVISION அளித்துள்ளது . ஏற்கனவே E-POST
என்ற பெயரில் சினிமா நடிகையின் பிறந்த நாளுக்கும் ,
அரசியல் கட்சிகளின் திருவிழாக்களுக்கும் ஆள்
பிடிக்கச் சொல்லும் அதிகாரிகள் , RPLI TARGET என்ற
பெயரில் FICTITIOUS POLICY போடச் சொல்லும்
அதிகாரிகள் இனி என்ன செய்வார்கள் என்பது தெளிவு !
GDS ஊழியர்களைக் காத்திட அகில இந்திய அளவில்
தொடர் போராட்டம் அவசியம் என்பதை எதிர்வரும்
சம்மேளன மாநாட்டில் நாம் கோருவோம்.
அந்த திசை நோக்கி தீர்மானம் எடுப்போம் !
No comments:
Post a Comment