Tuesday 29 March 2016

CBS / CIS பிரச்சினையில் நாம் !!!



SECRETARY GENERAL NFPE AND FNPO TODAY MET MEMBER TECH. AND MEMBER (P) ON CBS AND CIS ISSUES AND THE OUTCOME

           CBS / CIS  பிரச்சினையில்  நாம் !
        ===============================================
                  அன்பார்ந்த தோழர்களே !  தோழியர்களே !! வணக்கம் !!!
நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இன்று நமது அஞ்சல் மூன்று பொதுச் செயலரும் சம்மேளன மாபொதுச் செயலருமான  தோழர்  பராசர் அவர்கள்   MEMBER(P)  மற்றும்  MEMBER (TECH ) இருவரையும்  FNPO  பொதுச் செயலருடன் சென்று சந்தித்ததாலும்,(இடையில் மூன்று நாட்கள் நிர்வாக அலுவலகங் களுக்கு விடுமுறை என்பதால்  நம்முடைய பொதுச் செயலர்  DTE  செல்ல  இயலவில்லை )

நம்முடைய கடிதம் ஏற்கனவே இலாக்காவுக்கு  அனுப்பப்பட்டதாலும் ஏற்பட்ட முன்னேற்றம்,  அதன் தொடர்ச்சியாக இலாக்காவில் இருந்து அளிக்கப்பட்டிருக்கும் ஈமெயில்  நகல் கீழே காண்க. 

ஏற்கனவே கடந்த 24.3.2016 அன்று சென்னையில் நடைபெற்ற  நம்முடைய  மாநிலச் சங்க நிர்வாகிகள்  கூட்டத்தின்  முடிவின்படி , இந்தப் பிரச்சினை தீரவில்லையானால்   இதர சங்கங்களையும் கலந்துகொண்டு  ஒரு வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது குறித்து அன்றே SMS  அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  அளிக்கப் பட்டது  தெரிந்ததே. நம்முடைய பொதுச் செயலருக்கும் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.  

அதன் அடிப்படையில் அஞ்சல் நான்கு மற்றும் GDS சங்கத்தையும் அவர்களின் பிரச்சினைகளையும் சேர்த்தே போராட்டம் நடத்திட நாம் அணுகியுள்ளோம்.  கூட்டத்தின் முழு விபரங்களை  அடுத்த செய்தியில் வெளியிடுகிறோம்.  

நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் வலைத்தளம் மற்றும் ஈமெயில்  , SMS  மூலம் உடனுக்கு உடன் அனைத்து நிர்வாகிகள் , செயலர்களுக்கு அவ்வப்போதே தெரிவிக்கப்படுகிறது. முகநூலிலும் அவ்வப்போதே பொதுச் செய்தியாக  பகிரப்படுகிறது. 

பிரச்சினையில், இலாக்கா  உயர் அதிகாரிகள்  அளித்த கீழே காணும் ஈமெயில்படி,   முன்னேற்றம்  ஏற்படவில்லையானால் அஞ்சல் மூன்று  மாநிலச் சங்க முடிவுகளை   தேவை  ஏற்படின் தனியாகக் கூட அமல்படுத்திட இந்த மாநிலச் சங்கம் தயங்காது என்பதையும் நம்முடைய நிர்வாகிகள், செயலர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.  

கடந்த  ஆண்டில் 26.3.2015 அன்று ,  30 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தல மட்ட கோரிக்கைகளுக்காகக்கூட  வேலை நிறுத்தம் நடத்திய   உறுதி மிக்க மாநிலச் சங்கம் இது என்பதை  நாம்  தெரிவித்துக் கொள்கிறோம். எந்தக் காலத்திலும் பொறுப்பில் இருந்து ஓடி ஒளிந்ததில்லை நம்முடைய  மாநிலச் சங்கம் .

1 comment: