Monday, 23 February 2015

குடந்தை கோட்டத்தில் 22.2.2015 ஞாயிறு அன்று HINDI LITERACY TRAINING ரத்து

SUCCESS TO OUR CIRCLE UNION EFFORTS !

அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கம் ! 

கடந்த 19.2.2015 மற்றும் 20.2.2015 தேதிகளில் நம் மாநிலச் சங்கத்தின் மூலம் இரண்டு  பிரச்சினைகள்  நம்முடைய CPMG  மற்றும் PMG , CR  அவர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. கடிதங்களின் நகல் ஏற்கனவே அன்றைய தேதியில் நம்முடைய  மாநிலச் சங்க வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. 

ஒன்று, குடந்தை கோட்டத்தில் 22.2.2015 ஞாயிறு அன்று HINDI LITERACY  TRAINING காலை 10.00 முதல்  மாலை 04.00 மணிவரை 30  தோழிய /தோழர்களுக்கு உத்திரவிடப்பட்டிருந்தது.   அந்த உத்திரவு  20.02.2015 மாலையே ரத்து செய்யப்பட்டு மறு உத்திரவிடப்பட்டது என்பது  நம் மாநிலச் சங்கத்தின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.  நாம் எடுத்துச் சென்ற பிரச்சினையின் தன்மை அறிந்து   உடன் ரத்து செய்திட உத்திர விட்ட  PMG, CR  அவர்களுக்கும்  DPS , CR  அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நன்றி !

இரண்டாவது, வங்கி ஊழியர்களின்  4 நாட்கள் வேலை நிறுத்தத்தினை ஒட்டி  நம்முடைய ஊழியர்கள் அனைவருக்கு எதிர்வரும் 24.2.2015 அன்றே ஊதியம் அவர்களுடைய கணக்கில் CREDIT   செய்திட வேண்டும் என்ற கோரிக்கையாகும்.  இது குறித்து  நம்முடைய   மாநிலத்திற்கு  ADDL  CHARGE ஆக உள்ள  CPMG , KARNATAKA  அவர்களுக்கு  நம்முடைய கோரிக்கை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்களன்று ஊழியர் களுடைய அஞ்சல் சேமிப்பு கணக்கில்  ஊதியம்  CREDIT  செய்திட உத்திரவிடுவதாக  முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்  மாநில நிர்வாகத்தில் நமக்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அனேகமாக  திங்களன்று  இது குறித்த உத்திரவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கிறோம். உத்திரவு வந்தவுடன் இந்த  வலைத்தளத்தின் மூலம் உங்களுக்கு தெரிவிக்கப்படும். 

No comments:

Post a Comment