Tuesday 28 October 2014

SUCCESS ON CIRCLE UNION EFFORTS IN STAFF MATTERS

SUCCESS ON   CIRCLE UNION   EFFORTS   IN   STAFF MATTERS

மாநிலச் சங்கத்தின் முயற்சிகளுக்கு வெற்றி !

1. கடந்த 24.09.14 அன்று CHIEF  PMG அவர்களைச் சந்தித்துப்  பேசி நாம் அளித்த 7 பிரச்சினைகளில்  ஏற்கனவே 2 இல் தீர்வு கண்டது குறித்து நமது வலைத்தளத்தில் செய்தி அளித்திருந்தோம். அதில் மேலும் ஒரு பிரச்சினை தற்போது தீர்வு கண்டு உத்திரவு இடப்பட்டிருக்கிறது. 

புதுக் கோட்டை கோட்டத்தை சேர்ந்த  தோழியர் . திருச்செல்வி அவர்கள் LGO  தேர்வில் வெற்றிபெற்று கடந்த 12.05.2014 இல் மதுரை PTC க்கு பணிப்பயிற்சிக்கு  அனுப்பப் பட்டார். திடீரென்று அவரது கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, இரண்டு நாள் விடுப்பில் சென்ற  அவர் பணிப் பயிற்சிக்கு திரும்ப முடியவில்லை .அவரது விடுப்பு நீட்டிப்பு  விண்ணப்பம்  மறுக்கப்பட்டு ,  DISCHARGE  செய்து அனுப்பப்பட்டார். இடையில் அவரது கணவரும் இறந்துவிட்டார். 

அந்தத் தோழியரை மீண்டும்  தபால்காரராக பாணி  புரிய  உத்திரவிட்டது நிர்வாகம். நேரடி எழுத்தர் போல, இலாக்கா ஊழியர்  பதவி உயர்வு பெறும் போது  பணிப்  பயிற்சி உடனே மேற்கொள்ளவேண்டும் என்பதோ அல்லது பணிப்  பயிற்சி முடித்தால்தான் அவர் எழுத்தராக முடியும் என்பதோ சரியல்ல என்று நாம் CPMG  அவர்களிடம் எடுத்துரைத்தோம். 

மேலும் அவர் அடுத்த SESSION  பயிற்சி ஆரம்பிக்கும்போது செல்லாம் என்றும் அதுவரை எழுத்தராக பணி  நியமனம் அளிப்பதே சரி என்றும் கூறினோம். நமது கோரிக்கையை ஏற்று CHIEF  PMG அவர்கள்  தற்போது அந்தத் தோழியர் எழுத்தராக பணி  புரிய உத்திரவு  அளித்து , அதன் அடிப்படையில் அந்தத் தோழியரும் எழுத்தராக பணியில் அமர்ந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உத்திரவிட்ட  CPMG  அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக  உதவி செய்த AD STAFF  திரு. ஆறுமுகம் அவர்களுக்கும்  நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

2. சென்னை GPO  மற்றும்  வட  சென்னை கோட்டங்களில் இருந்து தென் சென்னை கோட்டத்திற்கு MINUS  BALANCE  பிரச்சினைக்கென்று காரணம் காட்டி நீண்ட காலம் DEPUTATION  அனுப்பப்பட்டு,  பல  ஊழியர்கள் அங்கேயே RETAIN  செய்யப் பட்டனர்.  இது தவறு என்று சுட்டிக் காட்டி நமது மாநிலச் சங்கம் பலமுறை PMG  CCR  அவர்களிடம் கடிதம் அளித்துப் பேசியும் பிரச்சினை தீர்க்கப் படாமல் இருந்தது. 

கடந்த மாதம் இது குறித்து வட  சென்னை கோட்டச் செயலர் திருமதி. ஏஞ்செல் சத்தியநாதன் அவர்கள் மாநிலச் சங்கத்திற்கு   அளித்த புகாரின் அடிப்படையில், மீண்டும் PMG அவர்களிடம்  பேசினோம். MINUS  BALANCE  பிரச்சினை முடிந்தும்  DEPUTATION  நீட்டிப்பு தவறு என்று சுட்டிக் காட்டினோம். இந்தப் பிரச்சினையில்  விரைவில் உத்திரவு அளிப்பதாக  PMG அவர்கள் உறுதியளித்திருந்தார். அதன்படி கடந்த வாரம் உத்திரவு அளிக்கப்பட்டது.அதன்படி ஏற்கனவே DEPUTATIONஇல் தென் சென்னை கோட்டத்தில் இருந்த அனைத்து ஊழியர்களும் விடுவிக்கப் பட்டு CHENNAI  GPO  மற்றும் வட  சென்னை கோட்டத்தில் நேற்று பணியில் சேர்ந்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அதிக காலதாமதம் என்ற போதிலும், மாநிலச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அவர்களை மீண்டும் அவரவர்களின் கோட்டத்திற்கே திருப்பி அனுப்ப உத்திரவிட்ட PMG CCR  அவர்களுக்கும்  அதற்கு உறுதுணையாக செயல்பட்ட AD STAFF  திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் நம் நன்றியை பதிவு செய்கிறோம். 

No comments:

Post a Comment