SETTLEMENT OF CASES ON CIRCLE UNION EFFORTS
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
1. கடந்த 04.02.2015 அன்று
என்ற தலைப்பில் மாநிலச் சங்கம் CPMG , TN அவர்களுக்கு எடுத்த பிரச்சினைக்கான கடித நகலை வெளியிட்டிருந்தோம். அதில்
"In an instant case at Erode Division, , the ASPOs., Erode South Sub Division has issued orders to withhold the TRCA to 25 GDS officials , those who are not attended the RPLI Mela, even without issuing any show cause notice to get their reply. He simply brushing aside the basic rules of the Department and throwing into Dustbin."
என்று CPMG அவர்களது கவனத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தோம். தற்போது அந்த 25 தோழர்களுக்கும் எந்தவித காரணமும் காட்டாமல் அநீதியாக பிடிக்கப் பட்ட ஊதியம் , அதே போலவே எந்தவித காரணமும் சொல்லாமல் தற்போது வழங்கப்பட்டுவிட்டதாக ஈரோடு கோட்டச் செயலர் தோழர். சுவாமிநாதன் அவர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையில் CPMG அவர்களிடமிருந்து கண்டனத்துடன் கூடிய உரிய அறிவுறுத்தல் அளிக்கப்பட்டதால் , பிடிக்கப்பட்ட ஊதியம் உடனே எந்தவித காரணமும் கூறாமல் வழங்கப்பட்டுள்ளது . உடன் நடவடிக்கை எடுத்த CPMG அவர்களுக்கு நம் நன்றி !
2. மேலும், நம்முடைய அகில இந்திய பொதுச் செயலருக்கு கடந்த 03.02.2014 அன்று நம்முடைய மாநிலச் சங்கம் அளித்த கடித நகலை பிரசுரித்திருந் தோம்.அதில் ஏற்கனவே எடுக்கப்பட்டு தீர்க்கப்படாத பிரச்சினையாக
"Item no. 9 . Settle MACP related issues
In respect of officials, those who declined TBOP, BCR before introduction of MACP, were not granted with MACP . Case of Dharmapuri Division - pending for long , already discussed and case refd. to CHQ."
என்பதை அளித்திருந்தோம். நீதி மன்றத்தில் அந்த ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதும் , அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு இலாக்கா உத்திரவு அனுப்பப்பட்டதாக நம்முடைய பொதுச் செயலர் நமக்கு தெரிவித்துள்ளார். அதனை தருமபுரி கோட்டச் செயலர் தோழர். பழனிமுத்துவும் நம்மிடம் தற்போது உறுதி செய்துள்ளார். நம் மாநிலச் சங்கம் அளித்த பிரச்சினையில் உரிய முறையில் செயல்பட்டு தீர்வு கண்ட நம்முடைய பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுக்கு நம் நன்றி. இந்தப் பிரச்சினை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வாகாமல் இருந்தது- தற்போது தீர்வு காணப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment