Monday, 12 January 2015

TWO DEMONSTRATIONS IN A SINGLE STAGE

TWO DEMONSTRATIONS IN A SINGLE STAGE - ONE IS RMS JCA AND THE OTHER IS IS FROM AIPRPA

CHIEF PMG அலுவலக வளாகத்தில் 
ஒரே மேடை -  வெற்றிகரமாக  இரு போராட்டம் !
ஒன்று - RMS  சங்கங்களின் JCA  வின்  கண்டன ஆர்ப்பாட்டம் !
மற்றொன்று -அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் !

அஞ்சல் - RMS  ஓய்வூதியர்களுக்கு கடந்த 19.11.2014 லிலேயே  FMA  ரூ. 300/- லிருந்து ரூ. 500/- ஆக உயர்த்தி  உத்திரவிடப் பட்டிருந்தும் இன்றைய தேதி வரை  அது வழங்கப் படாததை கண்டித்தும், 

RMS  PARCEL  HUB  என்ற பெயரில் ஈக்காட்டுத் தாங்கலில், ஒப்பந்தத்தை மீறி  சென்னை பெருநகரத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் இருந்தும்  EPP, BUSINESS  PARCEL  என எல்லாவற்றையும் குவியப்படுத்தி சென்னை SORTING  ஊழியர்களுக்கும் EGMORE  RMS ஊழியர்களுக்கும் பணிக்குறைப்புத் திட்டத்துடன் செயல்படும்  மாநில அஞ்சல் நிர்வாகத்தின்  போக்கை கண்டித்தும், 

இன்று (12.01.2015) மதியம் சென்னை  CPMG  அலுவலக வளாகத்தில் தனித்தனியே  கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இரண்டும் ஒன்று சேர்த்து  மிகப் பெரிய அளவில் JCA  ஆர்ப்பாட்டமாக அது மாற்றப் பட்டது.  

ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு  அஞ்சல் RMS  ஓய்வூதியர் சங்கத்தின்   பொதுச் செயலாளர் தோழர். K . ராகவேந்திரன் அவர்களும்  FNPO  சம்மேளனத்தின் மாபொதுச்  செயலர் தோழர். தியாகராஜன் அவர்களும் கூட்டுத் தலைமை ஏற்று பேசினார்கள் .  NFPE  FNPO   சம்மேளனங்களின்  RMS  பகுதி மாநிலச் செயலர்கள்  தோழர். K . ரமேஷ், தோழர். பரந்தாமன்,  தோழர் . P .குமார்,  தோழர். ஸ்ரீ தரன் ஆகியோர்  கோரிக்கை முழக்கங்களை எழுப்பி  ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தினார்கள்.  NFPE  இணைப்புக் குழுவின் கன்வீனர் தோழர். J . இராமமூர்த்தி,  FNPO   மூத்த தலைவர் தோழர். நூர்  அகமது ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.  தோழர். K . ரமேஷ் அவர்கள் நன்றி கூற  ஆர்ப்பாட்டம்   முடிவுற்றது. ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம்.

வெற்றிச் செய்தி : 
இன்று  ஓய்வூதியர்களுக்கான  FMA  உத்திரவு உடன்  வழங்கப் பட்டது.





















No comments:

Post a Comment