Saturday, 10 January 2015

பொங்கல் பண்டிகை காலத்தில் பயிற்சி வகுப்புகள் ரத்து !

THANKS TO PMG, CCR AND PMG, WR FOR CANCELLING TRAINING SESSION ORDERED DURING PONGAL FESTIVAL

பொங்கல் பண்டிகை காலத்தில்  பயிற்சி வகுப்புகள் ரத்து !

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் !

பொங்கல் திருநாளை உள்ளடக்கி  ;அஞ்சல் பயிற்சி வகுப்புகள்  சென்னை பெருநகர மண்டலத்தில் , பாண்டிச்சேரியிலும் , மேற்கு மண்டலத்தில் கோவையிலும்  உத்திரவு இடப்பட்டிருந்தது . 

பயிற்சி வகுப்புகளுக்கு பணிக்கப்பட்டிருந்த நம்முடைய தோழர்/ தோழியர்கள் பொங்கல் திருநாளை  தங்கள் இல்லத்தில் குடும்பத்துடன்  கொண்டாடிட இயலாது  என்பதையும், மேலும்  திருநாளை ஒட்டி  பணிப்  பயிற்சி  நகரங்களில்  உணவுச் சாலைகள் மூடப்பட்டு   அவர்கள் அவதியுறுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி,  நேற்றைய தினம் சென்னை பெருநகர PMG அவர்களிடம்  நம்முடைய மாநிலச் செயலர் கடிதம் அளித்துப் பேசினார். 

அதேபோல  நேற்று மாலை  நம்முடைய மேற்கு  மண்டலச் செயலர்  தோழர். C . சஞ்சீவி அவர்கள்  PMG, WR  அவர்களுக்கு EMAIL  மூலம் கடிதம் அளித்திருந்தார்.  தொடர்ந்து இன்று நிர்வாக அலுவலகங்களுக்கு விடுமுறை தினமானபோதிலும்  நம்முடை மாநிலச் செயலர்  நம்முடைய PMG CCR  அவர்களைத் தொடர்பு கொண்டு  பயிற்சி வகுப்பினை  ரத்து செய்திட  நினைவூட்டினார். அதேபோல  மேற்கு மண்டலச் செயலரும்  PMG WR  அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இந்த  பயிற்சி வகுப்பினை  ரத்து   செய்திடக்  கோரினார்.  

நம்முடைய மாநில மற்றும் மண்டலச் செயலர்களின் கோரிக்கைகளை ஏற்று   இரண்டு  மண்டலங்களிலும்  பொங்கல் பண்டிகை காலத்தில்  உத்திரவிடப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள்  இன்று ரத்து செய்யப் பட்டு  உத்திரவிடப்பட்டன .

விடுமுறை நாளானபோதிலும்  நம்முடைய கோரிக்கையை ஏற்று இன்றைய தேதியில்   உத்திரவிட்ட  PMG CCR மற்றும் PMG WR  ஆகிய  இருவருக்கும்  நம் மாநிலச் சங்கத்தின்  நன்றியை  ஊழியர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். 

விடுமுறை தினத்திலும்  மேற்கு மண்டல PMG ஐ  தொடர்பு கொண்டு  இந்த  பயிற்சி வகுப்பினை ரத்து செய்திட  விரைந்து செயல்பட்ட  நம்முடைய மேற்கு மண்டலச் செயலர்  தோழர். C . சஞ்சீவி அவர்களுக்கு  மாநிலச் செயலரின்  பாராட்டுக்கள்  !  வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment